அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் இதை மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா என பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையில் மோசடிகளில் ஈடுபட்டதாக தொழிலதிபர் அதானி மீது அமெரிக்கா நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் இது குறித்து சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதானி குழுமத்திற்கு எதிராக கயிறு இறகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக் கொள்ள முடியுமா? என சுப்பிரமணியசாமி பதிவு செய்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் உண்மைக்கு புறம்பாக பங்குச்சந்தையில் மோசடி செய்து லாபம் பார்த்தது என்றும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது என்றும் அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டி உள்ளது
இதனை அடுத்து அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர் இருப்பதாக அதானி கூறி உள்ள நிலையில் அந்த வழக்கை எதிர்கொள்ள தங்கள் தயார் என்றும் அமெரிக்க நீதிமன்றத்தில் உங்கள் வழக்கை பதிவு செய்யுங்கள் என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.