பாஜக, எம்.பி., சுப்பிரமணியன் சாமிக்கும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும், இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனை, சுப்பிரமணியன் சாமி இடைவிடாமல் விமர்சித்ததற்கு, அருண் ஜேட்லி மீதான பகையே காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த பகை நேற்று வெளிப்படையாக வெடித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பிரமணியன் சாமியிடம் ”நீங்கள் சிறந்த நிதி அமைச்சராக இருக்கமுடியா?” என்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு அவர், “நான் ஒரு பொருளாதார வல்லுநர். அருண் ஜேட்லி வழக்கறிஞர். அவர் எப்படி என்னவிட சிறப்பாக இருக்க முடியும்?” என்றார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.