Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை ரூ.40க்கு விற்க வேண்டும்: மிகப்பெரிய சுரண்டல் என சு.சுவாமி குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (09:27 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் கச்சா எண்ணெய் குறையும் அளவுக்கு வரிகளை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றனர். இதனால் ரூபாய் 40 முதல் 50க்கு விற்க வேண்டிய பெட்ரோல் விலை தற்போது 90 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது 
 
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சாமி அவர்கள் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.40க்கு விற்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அவர் மேலும் கூறியபோது ’பெட்ரோல் விலை ரூபாய் 90 என்பது இந்திய மக்களிடம் ஒரு மிகப்பெரிய சுரண்டல். சுத்திகரிக்கபடுவதற்கு முன்பு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 30 மட்டுமே. அனைத்து வகையான வரிகள் மற்றும் பெட்ரோல் பம்ப் கமிஷனும் போக, மீதமுள்ள 60 ரூபாயை அரசு சுரண்டுகிறது.
 
என்பார்வையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.40 இல் தான் விற்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி ஒருவரே மத்திய அரசு மக்களிடம் மிகப்பெரிய சுரண்டல் செய்கிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments