Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டு தற்கொலை நாடகமாடிய மாணவன்

Advertiesment
தேர்வில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டு தற்கொலை நாடகமாடிய மாணவன்
, புதன், 25 ஏப்ரல் 2018 (12:02 IST)
மகாராஷ்டிராவில் பல்கலைக்கழக தேர்வில் காப்பி அடித்த மாணவன், தன்னை கண்டித்த ஆசிரியரை தாக்கியதோடு, அவன் தற்கொலை செய்து கொள்வேன் என நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தூண்களே இளம்தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் தான் என்று கூறும் வேளையில், சில மாணவர்கள் செய்யும் கீழ்த்தரமான வேலை அனைவரையும் புண்படுத்தும்படியாக உள்ளது.
 
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுராங்காபாத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று தேர்வு நடைபெற்ற போது மாணவர் ஒருவர் காப்பி அடித்துள்ளார். இதனைக்கண்ட ஆசிரியர் மாணவனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவன் ஆசிரியரை தாக்கியுள்ளான்.
webdunia

மேலும் தான் தாக்கியதை வெளியில் கூறினால் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளான். இதனால் ஆசிரியர் செய்வதறியாது திகைத்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  மாணவனை பிடித்து  தற்கொலைக்கு முயற்சி செய்தல், தேர்வில் மோசடி செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடாளுமன்றம் புனிதமானது அல்ல; அங்கும் பாலியல் தொல்லை?