நாடு முழுவதும் இயங்கி வரும் 23 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பட்டியலில், புதுடெல்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 66 போலி கல்லூரிகள் முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள 22 போலி பல்கலைக்கழகங்களில், ஏழு பல்கலைக்கழகங்கள் தில்லியில் உள்ளது.
இந்தக் கல்லூரிகள் அனைத்தும் டிகிரி சான்றிதழ்களை வழங்கத் தகுதியற்றவை. அவை வழங்கும் சான்றிதழ்கள், போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.