Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: உடந்தையாக இருந்த ஆசிரியர்!

மாணவனுடன் ஓரினச்சேர்க்கை: உடந்தையாக இருந்த ஆசிரியர்!

Advertiesment
மாணவன்
, சனி, 17 செப்டம்பர் 2016 (11:17 IST)
உத்தரபிரேதச மாநிலத்தில் மாணவன் ஒருவனுக்கு போதை மருத்து கொடுத்து சக மாணவர்கள் அவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பரூக்காபாத் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா பிரதாப் என்ற மாணவன் மதுராவில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வருகிறான். இவனுடைய உணவில் மயக்க மருந்து கலந்து அவன் மயக்கமடைந்ததும், ஏழு மாணவர்கள் அவனுடன் உடலுறவு செய்து வந்துள்ளனர்.
 
இந்த செயலுக்கு அதே கல்லூரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் துணையாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் அவனை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர் அவர்கள்.
 
இதனையடுத்து அந்த மாணவன் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 8 பேர் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.19 முதல் ரூ.4,999 வரை ஜியோ 4ஜி சலுகையின் முழு விவரம்