Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்வு அறையில் மானபங்கம்: ரயில் முன் பாய்ந்த மாணவி

Advertiesment
தேர்வு அறையில் மானபங்கம்: ரயில் முன் பாய்ந்த மாணவி
, வியாழன், 29 நவம்பர் 2018 (19:42 IST)
கேரள மாநிலத்தில் 19 வயதான மாணவியை தேர்வு அறையில் செக்கிங் என்ற பெயரில் மானபங்கம் படுத்தியதால் விரக்தியில் ரயில் முன் பாய்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் இரவிபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகள் ராகி கிருஷ்ணன். தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வரும் இவர் தேர்வு எழுத சென்றார். 
 
அப்போது தேர்வு அறைக்குள் நுழைந்த மேற்பார்வையாலர்கள், இவரது துப்பட்டாவில் சில எழுத்துக்கள் எழுதி இருப்பத்தை பார்த்து, காபி அடிக்கிறார் என நினைத்து அனைவரின் முன்பு துப்பட்டாவை இழுத்தனர். 
 
மேலும், தனி அறைக்கு அழைத்து சென்று பெண் ஊழியர்கள் உதவியுடன் அவரது மேலாடையை அவிழ்த்து சோதனை செய்தனர். இதனால் மனமுடைந்த மாணவி சோதனையின் போதே தப்பி ஓடியுள்ளார். 
 
ஊழியர்கள் அவரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால், அந்த மாணவியை பிடிக்க முடியாததால் பாதியில் வந்துவிட்டனர். ஆனால், அந்த மாணவி நேராக ரயில் தண்டவாளம் அருகே நின்றார்.
 
அப்போது வந்த திருவனந்தபுரம் - கொல்லம் இடையேயான கேரள எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதோடு, அந்த மாணவியின் துப்பட்டாவில் இருந்த எழுத்துக்கள் டிசைன் என்றும் அவர் காபி அடிக்கவில்லை என்றும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகின்றது : செந்தில் பாலாஜி