Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 ரூபாய் கொடுத்து சக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய சொன்ன மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (10:58 IST)
100 ரூபாய் கொடுத்து, தன்னுடன் படிக்கும் சக மாணவியை,   பாலியல் வன்கொடுமை செய்ய ஆள் செட் செய்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் தன்னுடைய ரேங்க் கார்டில் திருட்டுத்தனமாக பெற்றோரின் கையெழுத்து போட்டுள்ளார்.

அதனை அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவர் பார்த்துவிட்டு, ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். இதனால், சிறுமி மீது ஆத்திரம் கொண்ட சிறுவன், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய ஒன்பதாம் வகுப்பு மாணவனிடம் கூறியதாகவும், அதற்காக 100 ரூபாய் கட்டணம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆனால், அந்த மூத்த மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் இதைக் கூறிய நிலையில், பள்ளி நிர்வாகம் அந்த சிறுவனை அழைத்துக் கண்டித்துள்ளது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிய வந்ததால், அவர்கள் போலீஸிடம் புகார் அளித்தார்கள்.

இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விஷயத்தை மூடி மறைக்க முயன்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், கொலைக்கு திட்டம் போட்ட சிறுவனுக்கு 12 வயதுக்குள் இருப்பதால், அந்த சிறுவன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்.. கைதாக வாய்ப்பா?

உங்க இஷ்டத்துக்கு வரி போடுறதுக்கு நாங்க ஆளாக முடியாது! - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை!

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

அடுத்த கட்டுரையில்