Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் காந்தி சென்ற கார் மீது கற்கள் வீச்சு..! மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு..!!

Advertiesment
ragul gandhi

Senthil Velan

, புதன், 31 ஜனவரி 2024 (15:32 IST)
மேற்குவங்க மாநிலத்தில் ராகுல் காந்தியின் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் கொல்கத்தா மாநிலத்தில் இன்று அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது.  மேற்கு வங்க மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில்  ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து மேற்குவங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


ராகுல் காந்தியின் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய முறையில் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டிகர் மேயர் தேர்தல்..! இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.!!