Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுற்றுப்பாதை செல்லும் முன்னே வெளியேறிய செயற்கைக்கோள்கள்! – எஸ்.எஸ்.எல்.வி பயணம் தோல்வி!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (11:17 IST)
இஸ்ரோ இன்று விண்ணில் ஏவிய எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப்பாதையை அடையாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் ஏவுதலில் பல்வேறு மைல்கல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொட்டுள்ளது. முன்னதாக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை ஏவிய இஸ்ரோ புதிய முயற்சியாக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதலில் ஈடுபட்டது.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் சிறிய செயற்கைக்கோள்களை சிறிய பட்ஜெட்டில் ஏவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தையை ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள்களை விட எஸ்.எஸ்.எல்.வி சிறிய ரக ராக்கெட் ஆகும்.

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் மற்றும் நில ஆய்வு செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு இந்தியாவின் முதல் எஸ்.எஸ்.எல்.வி டி1 (SSLV D1) ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் விண்வெளியை அடைந்தபோது செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. சோதனையில் ராக்கெட் 3ம் கட்டத்திலிருந்து 4ம் கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்தபோதே செயற்கைக்கோள்கள் வெளியேறிவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments