இஸ்ரோவின் புதிய முயற்சியான எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் ஏவுதலில் பல்வேறு மைல்கல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொட்டுள்ளது. முன்னதாக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை ஏவிய இஸ்ரோ புதிய முயற்சியாக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதலில் ஈடுபட்டது.
எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் சிறிய செயற்கைக்கோள்களை சிறிய பட்ஜெட்டில் ஏவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தையை ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள்களை விட எஸ்.எஸ்.எல்.வி சிறிய ரக ராக்கெட் ஆகும்.
பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் மற்றும் நில ஆய்வு செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு இந்தியாவின் முதல் எஸ்.எஸ்.எல்.வி டி1 (SSLV D1) ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.