நான் வாய் திறந்தால் அவ்வளவுதான்: முதல்வரை மிரட்டிய ஸ்ரீரெட்டி

Webdunia
ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (14:57 IST)
டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அதன்பின்னர் சச்சின் உள்பட பலர் மீது குற்றஞ்சாட்டினார். தற்போது அவரது கவனம் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியுள்ளது.

தெலுங்கானா மாநில ஆளும் கட்சி ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ ஜீவன் ரெட்டி மீது தற்போது பாலியல் புகார்களை நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். எம்.எல்.ஏ ஜீவன்ரெட்டி அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர். அவர் என் முன்னாலேயே போதை பொருளை உட்கொண்டுள்ளார். பல பிரபலங்களுக்கு அவர் பெண்களை சப்ளை செய்யும் புரோக்கராக இருந்துள்ளார். அவர் மீது சந்திரசேகராவ் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமால் என்னை பழிவாங்கும் விதத்தில்  என் மீது நடவடிக்கை எடுத்தால் என்னை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் வாய் திறந்தால் அவ்வளவுதான். பலபேருடைய முகத்திரை கிழியும் என்று மிரட்டும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திடீரென தெலுங்கானா அரசியல்வாதிகள் மீது ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்