Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோதியது நிஜம் தான், ஆனால் கொலை செய்யவில்லை: இலங்கை!

Advertiesment
மோதியது நிஜம் தான், ஆனால் கொலை செய்யவில்லை: இலங்கை!
, வியாழன், 21 ஜனவரி 2021 (13:48 IST)
தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை என்று இலங்கை கடற்படை மறுப்பு. 

 
வங்க கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது, படகுகள் சேதப்படுத்தப்படுவது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தீவிர தேடுதலுக்கு பிறகு நால்வரும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையில் கப்பல் மீனவர்களின் படகை மோதியதால் மீனவர்கள் உயிரிழந்ததாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை என்று இலங்கை கடற்படை கேப்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பிடிக்கச் சென்றபோது கடற்படைக் கப்பல் மீது ஒரு படகு மோதியதாக மட்டும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதை சாப்பிட்டதும் வயித்தை கலக்கிடுச்சு! வறட்டிக்கு ரிவ்யூ எழுதிய நபர்! – இணையத்தில் வைரல்!