Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதில் தாமதம் : இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா?

Advertiesment
ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதில் தாமதம் : இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா?
, திங்கள், 26 பிப்ரவரி 2018 (12:59 IST)
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். எனவே, அவரது உடலை கொண்டு வர தொழிலதிபர் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றது.
 
எனவே, இன்று மதியம் 12 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெறும் எனக் கூறப்பட்டதுல் ஆனால், உடற்கூழு ஆய்வறிக்கை மற்றும் இறப்பு சான்றிதழ் ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை. எனவே, ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
 
அநேகமாக, மாலை 6 அல்லது 7 மணிகே ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அதன்பின் அவரின் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்துவார்கள். எனவே, அதற்கு பின் அவரின் இறுதிச்சடங்கு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி கால தாமதம் ஏற்பட்டல் நாளை இறுதிச்சடங்கு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
 
அவருக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீதேவியின் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற கொடூர தாய்