Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது போதையில் மயங்கி நீரில் மூழ்கினார் ஸ்ரீதேவி? -அதிர்ச்சி தகவல்

Advertiesment
மது போதையில் மயங்கி நீரில் மூழ்கினார் ஸ்ரீதேவி? -அதிர்ச்சி தகவல்
, திங்கள், 26 பிப்ரவரி 2018 (17:17 IST)
நடிகை ஸ்ரீதேவி துபாய் ஹோட்டலில் உள்ள அறையில் மது போதையில் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி நேற்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. 
 
தடவியல் துறையின் சான்றிதழ் கிடைக்காததால் உடலை இந்திய கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டவுடன், அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடல் தொடர்பான தடவியல் அறிக்கை அவரின் குடும்பத்தினரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், அவர் நீரில் மூழ்கி அவர் மரணமடைந்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால், மது போதையில் அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் துபாய் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அதேநேரம், அவரின் மரணத்தில் குற்றவியல் நோக்கம் எதுவுமில்லை என தடவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஸ்ரீதேவி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், அவர் மது போதையில் நீரில் மூழ்கி உயிரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம் ; நீரில் மூழ்கி உயிரிழந்தார் : புதிய தகவல்