மும்பை வந்தது ஸ்ரீதேவி உடல்: இறுதிச்சடங்கு எப்போது?

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (22:00 IST)
துபாயில் மரணம் அடைந்த பிரபல நடிகையின் உடல், தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் மூலம் சற்றுமுன் மும்பை வந்தது. மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் அஞ்சலிக்காக மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நாளை காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை,  ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கி மாலை 3.30 மணிக்கு வில்லிபார்லியில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ஸ்ரீதேவி மரணம் அடைந்து நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சற்றுமுன் தான் அவரது உடலின் புகைப்படம் ஊடகங்களில் வெளிவர தொடங்கியுள்ளது. ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த நாளை மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு லட்சக்கணக்கானோர் வருகை தர வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments