Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீலேகா! 3 வாரங்கள் ஆலோசித்ததாக தகவல்..!

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (14:36 IST)
33 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்த ஸ்ரீலேகா ஐபிஎஸ் கேரள பாஜகவில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை பெற்றவர் ஸ்ரீலேகா. இவரது YouTube சேனல் பிரபலமாக உள்ள நிலையில், சமீபத்தில் இவர் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், தற்போது கேரள மாநில பாஜகவில் அவர் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீலேகா, "நான் மூன்று வாரங்களாக ஆலோசனை செய்து பாஜகவில் இணைந்தேன். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்துதான் அந்தக் கட்சியில் இணைந்துள்ளேன்.

33 ஆண்டுகளாக நான் போலீஸ் அதிகாரியாக நடுநிலையாக பணிபுரிந்தேன். உறுதிமொழி எடுத்துக் கொண்டது போலவே நான் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தேன். ஓய்வுக்கு பிறகு சில விஷயங்களை வெளியில் நின்று இன்னொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.

அதன் பின் என் அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. மக்களுக்கு ஆதரவாக இருப்பதே பெரிய சேவை," என்று தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments