முதலில் பயணம் செய்துவிட்டு பின்னர் டிக்கெட்டிற்கான பணத்தை செலுத்தும் வசதியை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டதால் விமான நிறுவனங்கள் பல கடும் நஷ்டத்தை சந்தித்தன. இந்நிலையில் தற்போது விமான சேவைகள் பல நாடுகளில் தொடங்கப்பட்டு விட்ட போதிலும் பயணிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெய் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஆக்ஸிஸ், ஹெச்எஸ்பிசி, கோடக் மற்றும் எஸ்பிஐ பேங்க் க்ரெடிட் கார்டுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பணம் செலுத்தாமல் பயணித்துக் கொள்ளலாம். பின்னர் ஈஎம்ஐ முறையில் டிக்கெட்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.