Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்குள்ளான Mi-17V-5 வகை ஹெலிகாப்டரின் சில முக்கிய அம்சங்கள்!!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (18:28 IST)
உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட Mi-17 V5 விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

 
1. Mi-17 V5 ரஷ்யாவின் கசன் நிறுவனத்தின் தயாரிப்பாகும். உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது இது. 
 
2. இந்த ஹெலிகாப்டர் ராணுவ துருப்புகளை இடமாற்றம் செய்வது, கண்காணிப்பு பணிகள், பேரிடரின்போது மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும்.
 
3. பாலைவனம், கடல் மேற்பரப்பு, வெப்பமண்டலம், குளிர் பகுதிகள் என எந்த கால நிலையையும் எதிர்கொண்டு, பயணிக்கும் ஆற்றல், இந்த ஹெலிகாப்டருக்கு உண்டு.
 
4. அதிகபட்சமாக 13 ஆயிரம் கிலோ எடை, 36 பேர் வரை அமர்ந்து செல்லும் திறன் கொண்டது. இதன் எடை - 7,489 கிலோ, நீளம் - 18.42 மீ, உயரம் - 4.76 மீ, வேகம் - 280 கிமீ (அதிகபட்சம் 580 கிமீ), இறக்கையின் அளவு - 21 மீ, விலை - ரூ.145 கோடி
 
5. ஸ்லைடிங் கதவு, பாராசூட், அதிநவீன தேடுதல் கருவிகள், எமர்ஜென்சி ஏற்பட்டால் கடல் பரப்பில் மிதக்கும் வசதி, நைட் விஷன், ரேடார், தானியங்கி பைலட் சிஸ்டம் 
 
6. Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm மெஷின் துப்பாக்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் துப்பாக்கிகளை, ஹெலிகாப்டரில் இருந்தவாறே கையாள முடியும். 
 
7. ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க், வெடித்து சிதறாத அளவுக்கு பாலியூரிதேன் வேதியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments