Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி வரப்போவது கடினமானக் காலம் – ரேபரேலி மக்களுக்குக் கடிதம் !

Advertiesment
இனி வரப்போவது கடினமானக் காலம் – ரேபரேலி மக்களுக்குக் கடிதம் !
, திங்கள், 27 மே 2019 (08:53 IST)
17 ஆவது மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி தனது தொகுதி மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பெருந்தோல்வி அடைந்துள்ள நிலையில் அதன் பிரதான மாநிலங்களான உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் மொத்தமே 1 தொகுதியை மட்டுமே வென்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் அக்கட்சியின் சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை தேர்ந்தெடுத்ததற்காக அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘ என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வரக்கூடிய நாட்கள் நமக்கு மிகக் கடினமான காலமாக இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன். ஆனால் உங்கள் துணையோடு அதைக் காங்கிரஸ் எதிர்கொள்ளும். இந்த நாட்டின் மாண்புகளைக் காப்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேருவுக்கு அஞ்சலி செலுத்திய மோடி