Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்தமாக கார் கூட இல்லை.. சோனியா காந்தி தாக்கல் செய்த சொத்து மதிப்பு பட்டியல்..!

Mahendran
வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (13:45 IST)
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்ய தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் சொத்து பட்டியல் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அதில் அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சோனியா காந்தி தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் அவருக்கு சொந்த வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் இத்தாலியில் மட்டும் அவருக்கு சொந்தமாக சொத்து உள்ளது என்றும் அதுவும் அவரது மூதாதையர் சொத்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள தனது சந்தையின் சொத்து மதிப்பு ரூ.26 லட்சம் என்று சோனியா காந்தி தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் 78 கிலோ வெள்ளி மற்றும் 1267 கிராம் தங்கம் இருப்பதாகவும் டெல்லியில் அவருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருப்பதாகவும் அதன் மதிப்பு சுமார் 6 கோடி என்றும்  குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவரது எம்பிக்கான சம்பளம், ராயல்டி வருமானம், வங்கி டெபாசிட்டில் இருந்து கிடைக்கும் வட்டி, மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் லாபம் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் சோனியா காந்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12.5 கோடி என்று அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments