Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில காங்., தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா காந்தி உத்தரவு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (19:40 IST)
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அம்மாநிலத் தலைவர்களை  ராஜினாமா செய்யும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியாகி வரும் நிலையில் பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது,  உத்தரபிரதேசம்,  உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருந்த சட்டப்பேரவைத் தேர்தல்.

 பல கட்டங்களாக இங்குத் தேர்தல் முடிந்த  நிலையில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி, ஐந்து மாநில தேர்தல் நிலவரம் இன்று வெளியானது. அதில் , பாஜக 4  மாநிலங்களில் முன்னிலையிலும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இ ந் நிலையில், சமீபத்தில் தேர்தல் தோல்வி குறித்து,     சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில் ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யும்படி சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி.டி.எப் வாசனுக்கு ஜாமீன்..! எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என நிபந்தனை.!!

காவேரி கூக்குரல் மூலம் தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தொடங்கி வைத்தார்!

சமோசா கடையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்! திருநெல்வேலியில் அதிர்ச்சி! – வீடியோ!

கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி..! பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்..!!

ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை.! ஜூன் 1-ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல்...!!

அடுத்த கட்டுரையில்
Show comments