காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி கடந்த சில நாட்களாக உடல் நலம் இன்றி இருந்தார் என்பதும் அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் ஆனார் என்பதும் தெரிந்ததே.
சமீபத்தில்கூட ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கூட சோனியா காந்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சோனியா காந்திக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால் வழக்கமான பரிசோதனைகளுக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்