வடமாநிலங்களில் பாஜகவின் கோட்டையாக மாறிவரும் நிலையில் ராகுல் காந்தியை அடுத்து சோனியா காந்தியும் தென் மாநிலத்தில் தான் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்ற காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதி பாஜக வசம் சென்றது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு சோனியா காந்தி வழக்கமாக போட்டியிடும் ரேபேலி தொகுதியில் அவர் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன
இதனால் சோனியா காந்தி பாதுகாப்பாக சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த தெலுங்கானாவில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.