Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருமகளை உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்: துப்பாக்கியால் சுட்ட மகன்!

மருமகளை உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்: துப்பாக்கியால் சுட்ட மகன்!

Advertiesment
மருமகளை உல்லாசத்துக்கு அழைத்த மாமனார்: துப்பாக்கியால் சுட்ட மகன்!
, திங்கள், 26 செப்டம்பர் 2016 (16:19 IST)
உத்தரபிரதேச மாநிலம், ஃபருக்காபாத்தில் கடந்த சனிக்கிழமை ஒருவர் தனது மருமகளிடம் தவறாக நடந்துகொண்டு உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரமடைந்த அவரது மகன் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஃபருக்காபாத் மாவட்டம் இமாத்பூர் தாம்ரை பகுதியை சேர்ந்தவர் ரதிராம்(50). இவருடைய மகன் அமித்(28). இவர் தன்னுடைய தந்தை தனது மனைவியிடம் வரம்பு மீறி நடந்துகொண்டு உல்லாசத்துக்கு அழைத்ததால் ஆத்திரமடைந்த்து அவரை துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
 
மகனால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ரதிராமை மீட்டு அருகில் உள்ள சுகாதாரா நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர் தற்பொழுது அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
தந்தையை சுட்ட துப்பாக்கியுடன் நடந்ததை போலீஸ் நிலையத்தில் கூறி சரணடைந்துள்ளார் அமித். மேலும் அமித்தின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா புஷ்பாவை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம்