Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையை ஆள் வைத்து கொலை செய்த 16 வயது சிறுவன்.. அதிர்ச்சி காரணம்..!

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (15:08 IST)
தனது தந்தையை 16 வயது சிறுவன் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 16 வயது சிறுவன் தனது தொழிலதிபர் தந்தை இடம் செலவுக்கு பணம் கேட்டதாக தெரிகிறது/ அவ்வப்போது பணம் கொடுத்து வந்த தொழிலதிபர் தந்தை ஒரு கட்டத்தில் பணம் தர முடியாது என்று கூறியுள்ளார்

இந்நிலையில் திடீரென அந்த இளைஞனின் தந்தை துப்பாக்கியால் சுடப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இது குறித்து காவல்துறையில் விசாரணை செய்தனர்

இந்த கொலை தொடர்பாக மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டு விசாரித்த போது தான் கொலை செய்யப்பட்ட தொழிலதிபதியின் மகன் தங்களுக்கு 6 லட்சம் ரூபாய் பணம் தருவதாக உறுதி அளித்ததாகவும் முன்பணமாக ஒன்றரை லட்ச ரூபாயை கொடுத்து தனது தந்தையை கொலை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிய வந்தது

 இதனை அடுத்து சிறுவனை பிடித்து விசாரித்த போது தனக்கு அடிக்கடி செலவுக்கு பணம் தந்து கொண்டிருந்த தந்தை ஒரு கட்டத்தில் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டதாகவும் அதனால் அவரை கொலை செய்துவிட்டால் மொத்த பணமும் தனக்கு வந்துவிடும் என்று நினைத்து கூலிப்படையை ஏவி விட்டதாகவும் கூறியுள்ளான்

இதனை அடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்.. பதட்டமின்றி போலீசில் சரண்..!

நெல்லை முன்னாள் எஸ்.ஐ., படுகொலை; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை போல் ஆண்களுக்கு மாதம் 2 புல் பாட்டில்: எம்.ல்.ஏ கோரிக்கை..!

ரயில்வே தேர்வு ரத்து.. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்.எச்.பி பெட்டிகள்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments