Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (12:14 IST)
இன்றைய மின்னணு உலகில், சார்ஜர்கள் ஏராளம். ஆனால், 'ஸ்நேப்-என்-சார்ஜர்' என்ற இந்த சிறிய சாதனம் பலரது விருப்பத் தேர்வாக மாறிவிட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், இது வெறும் சார்ஜர் அல்ல, ஒரு முழுமையான தீர்வு.
 
ஸ்நேப்-என்-சார்ஜர் கைகளில் இருந்தால் போதும், வேறு எந்தப் பவர் பேங்க்கோ, ஒயர்களோ தேவைப்படாது. இதை நேரடியாக உங்கள் செல்போனுடன் இணைத்து, சார்ஜ் செய்துகொண்டே பயன்படுத்தலாம். சார்ஜ் செய்யும் போது பேச முடியாது, ஒயர் தொந்தரவு போன்ற பழைய பிரச்சனைகளுக்கு இங்கு இடமில்லை. மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏறுவது இதன் தனிச்சிறப்பு.
 
முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட ஸ்நேப்-என்-சார்ஜரைக் கொண்டு செல்போன், இ-சிகரெட், ஸ்பீக்கர்கள் என பல சாதனங்களுக்கும் சக்தி அளிக்கலாம். இது மிகச் சிறியதாக இருப்பதால், எப்போதும் உங்களுடன் எளிதாக எடுத்துச் செல்லலாம். கனமான பவர் பேங்குகள், சிக்கலான ஒயர்கள் என எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
 
உங்கள் போன் C வகை, மைக்ரோ USB அல்லது ஆப்பிள் மாடலாக இருந்தாலும், இது அனைத்துடனும் இணங்கும். இரண்டு ஆண்டுகள் வாரண்டி உண்டு. சார்ஜ் அளவை எல்.இ.டி டிஸ்ப்ளே மூலம் தெளிவாகக் காட்டுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments