Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கு மீண்டும் ஒரு பெண் முதல்வர்? பாஜகவின் பக்கா பிளான்!

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (16:47 IST)
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தற்போது பிரச்சார களத்தில் இறங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது 
 
ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தான் முதல்வர் வேட்பாளர் என தைரியமாக அறிவித்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் இன்னும் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாமல் உள்ளனர்
 
காங்கிரஸ் கட்சியில் ஷீலா தீட்சித் இருந்தவரை முதல்வர் வேட்பாளர் பிரச்சனை இல்லாமல் இருந்தது. அதே போல் பாஜகவை பொருத்தவரை சுஷ்மா ஸ்வராஜ் இருந்தவரை அந்த பிரச்சனை இல்லை.
 
தற்போது இருவரும் இல்லை என்பதால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானியை டெல்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக பக்கா பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிளான் ஒர்க்-அவுட் ஆனால் மீண்டும் ஒரு பெண் முதல்வர் டெல்லிக்கு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments