Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி ஆணவம் இன்னும் மாறவே இல்லை.. ஸ்மிருதி இரானி ஆவேசம்..!

Siva
புதன், 6 மார்ச் 2024 (07:34 IST)
ராகுல் காந்தியின் ஆணவம் இன்னும் மாறவில்லை என அமேதி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமேதி தொகுதி பாஜக வேட்பாளரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியபோது, ‘நான் பேசுவது ராகுல் காந்தியை சென்று அடைகிறது என்றால் அவர் திறந்த காதுடன் நான் சொல்வதை நன்றாக கேட்டுக் கொள்ளட்டும்

பாஜக தலைமையிலான கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சி காலத்தை ஒப்பிட்டு விவாதம் நடத்த தயாரா என்று சவால் விட்டார்

இது குறித்து விவாதம் செய்யும் இடத்தை ராகுல் காந்தி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பாஜகவின் இளைஞர் அணி சேர்ந்த ஒருவர் கேள்வி கேட்டாலே ராகுல் காந்தி தனது பேசும் சக்தியை இழந்து விடுவார் என்றும் தெரிவித்தார்

ராகுல் காந்தி இன்னும் ஈகோவில் தான் உள்ளார் என்றும் அவர் இன்னும் மாறவே இல்லை என்றும் அவரது ஆணவம் நீங்கவில்லை என்றும் கடுமையாக ராகுல் காந்தியை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments