Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டு கேட்க மட்டும் வந்தார்; அப்புறம் ஆளை காணோம்! – அமித்ஷாவை சிவசேனா தாக்கு!

Advertiesment
ஓட்டு கேட்க மட்டும் வந்தார்; அப்புறம் ஆளை காணோம்! – அமித்ஷாவை சிவசேனா தாக்கு!
, சனி, 29 பிப்ரவரி 2020 (08:57 IST)
டெல்லி கலவரத்தில் அமித்ஷாவின் நடவடிக்கைகள் குறித்து சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பல உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்பட்டன. டெல்லியில் நடந்த இந்த கலவரம் குறித்து பேசியுள்ள சிவசேனா ”டெல்லி சட்டசபை தேர்தலின்போது டெல்லியில் மக்களிடம் பேச அமித்ஷா நீண்ட நேரம் ஒதுக்கினார். வீடு வீடாக சென்று வாக்கு கேட்டார். ஆனால் டெல்லியில் கலவரம் நடந்தபோது அங்கு அவர் வரவே இல்லை.

உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்ட சமயம் இவர் குஜராத்தில் ட்ரம்ப்பை வரவேற்று கொண்டிருந்தார். கலவரம் நடந்து மூன்று நாட்கள் கழித்தே அமைதியை பேண சொல்லி பிரதமர் மோடி செய்தி விடுக்கிறார். கலவரம் முடிந்த பிறகு நடவடிக்கைகள் எடுத்து என்ன பயன்? நாடாளுமன்ற கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. அதில் இந்த டெல்லி கலவரம் குறித்து கேள்வியெழுப்பினால் தேசத்துரோகி என்று சொல்வார்களோ?” என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாந்தோம் தேவாலயத்திற்குள் புகுந்த அர்ஜுன் சம்பத்: சென்னையில் பரபரப்பு!