சிவசேனா எம்பியை கைது செய்தது அமலாக்கத்துறை: மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு
சற்றுமுன்னர் அமலாக்கத் துறை அதிகாரிகள் சிவசேனா எம்பி ஒருவரை கைது செய்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
நிலமோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை நடத்தி வந்த நிலையில் சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்வதாக தெரிவித்தனர்
மேலும் அவரிடம் ஒன்பது மணி நேரம் விசாரணை செய்ததாகவும்,விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறாது.
சஞ்சய் ரெளத் எம்பி அவர்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது