மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக அங்கு அரசியல் குழப்ப நிலை இருந்து வந்தது. எந்தக் கட்சி ஆட்சி அமைப்பது என்ற போட்டியின் காரணமாக இருந்து வந்த குழப்பங்கள் ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர்
மேலும் சிவசேனா கட்சியை சேர்ந்த 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கவிருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 13 பேர்கள் அமைச்சர்களாகபதவி ஏற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, சிவசேனா ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாகவும், அக்கட்சிக்கு 13 அமைச்சர்கள் பதவியும் ஒரு சபாநாயகர் பதவியும் தர சிவசேனா ஒப்புக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன
எனவே நாளை சுமார் 40 அமைச்சர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி ஏற்க உள்ளனர். இந்த விழாவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன
முதல் முதலாக சிவசேனா ஆட்சி பொறுப்பேற்கவுள்ள நிலையில் மும்பை மாநகரம் விழாக்கோலத்தில் உள்ளது