ஆளும் கட்சியின் சாதனைகளுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேலியாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பல இன்னல்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னா் 1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று தெரிவித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம் பின்வருமாரு பேசினார். 1 சதவீத ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பா? இதுதான் உங்கள் ஆட்சியின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணா்களுக்கு நோபல் பரிசு வழங்கும் அளவிற்கு அவா்களுக்கு தகுதி உள்ளது கிண்டலாக பேசியுள்ளார்.