Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் பயமின்றி பணிபுரிய சிறந்த மாநிலம் எது தெரியுமா?

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (16:42 IST)
அமெரிக்காவின் பொருளாதார ஆலோசனை முன்னணி நிறுவனமான உத்திகள், சர்வதேச கல்வி மையம் (சிஎஸ்ஐஎஸ்) மற்றும் நாதன் அசோசியேட்ஸ் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில் இந்தியாவின் சிக்கிம் மாநிலம் அதிகபட்சமாக 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லி 8.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

 
இந்த ஆய்வு நான்கு அடிப்படையான விஷயங்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில்லரை வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் பெண்கள் வேலை பார்க்க சட்ட பூர்வமாக அனுமதித்துள்ள நேரம், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் நீதி கிடைக்கச் செய்வதற்கான அரசின் நடவடிக்கைகள், மாநிலத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் பெண்களின் சதவீதம் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன் கொடுமைகள் மற்றும் புதிய தொழில்முனைவு மற்றும் பெண் தொழில்முனைவோர் குறித்த கொள்கைகளில் அரசின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
 
இதில் மிகச் சிறிய வடகிழக்கு மாநிலமான சிக்கிம் முதலிடத்தில் உள்ளது. சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்து தெலங்கானா 28.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், புதுச்சேரி 25.6 புள்ளிகளுடன் மூன்றாவதாகவும் உள்ளது. இந்த வரிசையில் கர்நாடகா 24.7 புள்ளிகள், ஹிமாச்சல் பிரதேசம் 24.2 புள்ளிகள், ஆந்திரா 24 புள்ளிகள், கேரளா 22.2 புள்ளிகள், மஹாராஷ்டிரா 21.4 புள்ளிகள், தமிழ்நாடு 21.1 புள்ளிகள், சட்டீஸ்கர் 21.1 புள்ளிகள் பெற்றுள்ளன.
 
இந்த பட்டியலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டெல்லி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்