Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமா? முதல்வர் அதிர்ச்சி..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (09:14 IST)
கர்நாடக சட்டசபையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா  தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கர்நாடக சட்டப்பேரவையில் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரை சுற்றி இருந்த சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக தனியார் சேனல் ஒன்றில் செய்தி வெளியானது

காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது ஏன் என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து முதல்வர் சித்தராமையா  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த வீடியோ ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் அதன் உண்மை தன்மை குறித்து அறிந்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று சட்டசபையில் அமலியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments