டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 வாக்குகளும், எதிராக ஒரே ஒரு வாக்கும் பதிவு நடந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒரு எம்எல்ஏக்கள் கூட பிரிந்து செல்லவில்லை எப அரவிந்த் கெஜ்ரிவால் இதில் இருந்து நிரூபித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, நாட்டின் 3வது கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது என்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும் எம்எல்ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
மேலும் பாஜக இல்லாத நாட்டை ஆம் ஆத்மி கட்சி உருவாக்கும் என்றும் 2024 தேர்தலில் பாஜக தேர்தலை பாஜக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை, 2029 ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று பாஜக இல்லாத இந்தியா என்ற நிலையை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்