Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் சாசனத்தில் கைவைத்தால் ரத்த ஆறு ஓடும்: முன்னாள் முதல்வர் எச்சரிக்கை

Advertiesment
அரசியல் சாசனத்தில் கைவைத்தால் ரத்த ஆறு ஓடும்: முன்னாள் முதல்வர் எச்சரிக்கை
, புதன், 3 ஜூலை 2019 (10:23 IST)
அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சி செய்தால் ரத்த ஆறு ஓடும் என கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என ஆங்காங்கே உள்ள பாஜக பிரமுகர்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற கர்நாடகா தலித் மற்றும் பழங்குடியின ஒப்பந்ததாரர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதலவர் சித்தரமையா, சமத்துவத்தை ஏற்படுத்த இட ஒதுக்கீடு ஒரு வழி என்றும், நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரமான கல்வி, இயற்கை வளங்கள் கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் அவர், அரசியல் சாசனம் இல்லாமல் இருந்திருந்தால் தான் முதலமைச்சர் ஆகியிருக்கமுடியாது எனவும், மோடி பிரதமர் பதவியை நினைத்துகூட பாத்திருக்க முடியாது எனவும் கூறினார்.

அரசியல் சாசனம் இந்தியாவை வழிநடத்தக் கூடிய ஒரு வழிமுறை என்றும் அதனை மாற்ற யாராவது முயற்சி செய்தால் ரத்த ஆறு ஓடும் எனவும் சித்தராமையா கடுமையாக எச்சரித்துள்ளார்.

இவ்வாறு சித்தராமையா கூறியது பாஜக-வைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள், அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேக்சிமம் கடன் மோசடி தமிழகத்தில்... கணக்கு காட்டும் நிர்மலா சீதாராமன்!