இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

Siva
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (14:31 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருமல், சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை, மருத்துவர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐந்து வயது சிறுவன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலால் நகரில் சளி பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது, மருத்துவர் சுரேஷ் சந்திரா என்பவர், சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, சிகரட்டை அவனுடைய வாயில் வைத்து, பற்ற வைத்தார்.

அந்த சிகரத்தை புகைக்கும்  அவர் கூறுகிறார். இது குறித்த வீடியோ, இணையத்தில் வைரலாகியது.

இதனை அடுத்து, மருத்துவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.   மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும், துறைரீதியிதிலான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மருத்துவர், சளி, இருமலுக்கு ஒரு சிறுவனை சிகரெட் புகைக்க வைப்பது 'கொடுமையிலும் கொடுமை' என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments