மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:

Siva
வியாழன், 26 ஜூன் 2025 (08:08 IST)
ஐஐடி மும்பை கல்வி நிறுவனத்தில் பிலால் அகமது ஃபயாஸ் அகமது என்ற நபர், மாணவர் போல் வேடமிட்டு, 14 நாட்கள் வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
 
இந்த அத்துமீறல் முதலில் ஜூன் 4 ஆம் தேதி கவனிக்கப்பட்டது. CREST துறையின் அதிகாரி ஷில்பா கோட்டிக்கல், தனது அலுவலகத்திற்குள் ஒரு சந்தேகத்திற்கிடமான நபர் நுழைவதை கண்டார். அவரிடம் அடையாள அட்டை கேட்டபோது, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
 
சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு விரிவுரையாளர் அறையில் அமர்ந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக வளாக பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட நபரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஐஐடி மும்பை வளாகத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments