Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி சிலை இடிந்த விவகாரம்: சிலையை செதுக்கிய சிற்பி கைது..!

Mahendran
வியாழன், 5 செப்டம்பர் 2024 (11:58 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை சமீபத்தில் கனமழை காரணமாக இடிந்து விழுந்த நிலையில் அந்த சிலையை செய்த சிற்பி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜியின் 35 அடியை உயர சிலை கனமழையால் இடிந்து விழுந்த நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிலையின் கட்டுமான தரத்தில் மாநில அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் சிலை பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் சிலை சேதம் அடைந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் இந்த சிலை தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் சிலையை செதுக்கிய சிற்பி ஜெகதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் நீதிமன்ற காவலில் எடுக்கப்படுவார் என்றும் அதன் பின் நடக்கும் விசாரணையில் தான் சிலையை தரமற்ற முறையில் செய்தாரா என்பது குறித்து தெரியவரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சத்ரபதி சிவாஜி சிலையை செதுக்கிய சிற்பி கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments