Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்காக வாஜ்பாய் இறந்த தேதி மாற்றி அறிவிக்கப்பட்டதா?

வாஜ்பாய் மரணம்
Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (16:55 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 12, 13 ஆம் தேதிகளில் மிகவும் மோசமான நிலையில், 16 ஆம் தேதி மரணமடைந்தார். 
 
இந்நிலையில், அவரது இறந்த தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக சிவ சேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதனால் இந்த விஷ்யம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சஞ்சய் ராவத் எழுப்பிய சந்தேகம் பின்வருமாறு...
 
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி இறந்துவிட்டாரா அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை பாதிப்பிற்கு உட்படுத்துவதை தவிர்க்க அவரது மரண செய்தி தாமதமாக அறிவிக்கப்பட்டதா என மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும், நமது மக்களை காட்டிலும் சுயராஜ்யம் தான் முக்கியம் என ஆட்சியாளர்கள் உள்ளனர். சுதந்திர தினத்தின் போது நாடு துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதை தவிர்க்கவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகவும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மரணமடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments