டவ்தே புயல் கரையை கடந்த நிலையில் புயலால் அடித்து செல்லப்பட்ட கப்பல் மூழ்கியதில் ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் நேற்று முன்தினம் கரௌயை கடந்த நிலையில் குஜராத், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் புயல் வீசிய சமயம் ஓஎன்ஜிசி க்கு சொந்தமான கப்பல் ஒன்று 261 ஊழியர்களோடு மும்பையில் இருந்து 70 கி.மீ தொலைவில் கடலில் உள்ள எண்ணெய் கிணற்றில் பணியில் ஈடுபட்டிருந்துள்ளது.
அப்போது புயலால் கடல் சீற்றம் கொண்டதால் கப்பல் இழுத்து செல்லப்பட்டது. உயரமான அலைகள் மோதியதால் சேதமடைந்த கப்பலுக்குள் கடல் நீர் புகுந்ததால் கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கப்பல் அங்கு சென்றபோது கப்பல் மூழ்கி கொண்டிருக்க அதிலிந்து தப்பிக்க கடலில் குதித்து மிதந்து கொண்டிருந்தவர்களை கடற்படையினர் மீட்க தொடங்கினர்.
அவ்வாறாக 186 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். 61 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் கடல் பகுதியில் மிதந்து கொண்டிருக்கலாம் என்பதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.