இது ரொம்ப தப்பு.. கொலம்பியா சென்று அந்நாட்டு அரசுக்கே கண்டனம் தெரிவித்த சசிதரூர்...!

Siva
வெள்ளி, 30 மே 2025 (08:09 IST)
சசிதரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து, "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர் என்பதும், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருவதை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதையும், நாம் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், சசிதரூர் மற்றும் அவரது குழுவினர் பனாமா, கயானா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று, நேற்று கொலம்பியாவுக்கு சென்றனர். அப்போது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்த கலந்துரையாடலின் போது, கொலம்பியா அரசுக்கு சசிதரூர் தனது கண்டனத்தை தெரிவித்தார். பாகிஸ்தானில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற இந்தியாவின் நடவடிக்கையின் போது உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு கொலம்பியா அரசாங்கம் இரங்கல் தெரிவித்ததை அவர் கண்டித்தார்.
 
தற்காப்புக்காக செயல்படுபவர்களுக்கும், தீவிரவாதிகளை அனுப்புபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாமல் உங்கள் நாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதனால், அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தர்ம சங்கடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
 
சிங்கத்தின் குகைக்கே சென்று, அவர்களுடைய தவறை எடுத்துக்காட்டிய சசிதரூருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments