Publish Date: Wed, 27 Jul 2022 (10:12 IST)
Updated Date: Wed, 27 Jul 2022 (10:13 IST)
கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் இன்று ஏற்றம் பெற்றிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 5 மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை உயர்ந்தது 55 ஆயிரத்து 420 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 16520 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் இன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டு இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த வாரத்தின் வியாழன் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது