Publish Date: Wed, 22 Jun 2022 (10:20 IST)
Updated Date: Wed, 22 Jun 2022 (10:21 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாகவே சரிவில் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென 1000 புள்ளிகள் வரை உயர்ந்தது என்பதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
இந்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து முதலீட்டாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்து 51 ஆயிரத்து 990 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 180 புள்ளிகள் குறைந்து 15 ஆயிரத்து 455 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மீண்டும் அதல பாதாளத்தை நோக்கி சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது