Publish Date: Mon, 09 May 2022 (10:45 IST)
Updated Date: Mon, 09 May 2022 (10:46 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த வாரம் மட்டும் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே சென்செக்ஸ் 600 புள்ளிகள் தற்போது 54 ஆயிரத்து 210 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 180 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 16233 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது
பங்கு சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது