Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவின் தோல்விமுகம் எதிரொலி: படுபாதாளத்தில் பங்குச்சந்தை

பாஜகவின் தோல்விமுகம் எதிரொலி: படுபாதாளத்தில் பங்குச்சந்தை
, புதன், 14 மார்ச் 2018 (13:54 IST)
இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள வலிமையான கட்சி என்று கூறப்படும் பாஜக, உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று காலை முதல் படுசரிவை சந்தித்து வருகிறது

உபியின் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் முன்னணியில் உள்ளார். இவ்வளவிற்கு இந்த தொகுதி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பூல்பூர் மக்களவை தொகுதியிலும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரே முன்னணியில் உள்ளார்.

இந்த நிலையில் பாஜகவின் தோல்விமுகம், பங்குச்சந்தையில் எதிரொலித்தது, இன்று காலை முதலே இறங்குமுகத்தில் இருந்த பங்குச்சந்தை சற்றுமுன் வரை 137 புள்ளிகள் இறங்கி சென்செக்ஸ் 33718 என்ற அளவில் உள்ளது. மேலும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யெஸ் பேங்க், ஆந்திரப் வங்கி மற்றும் கனரா வங்கி போன்ற நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டிஸ், எல் அண்ட் டி மற்றும் ஆசிய பெயின்ட்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியை தாக்கும் சூரிய புயல்: விளைவுகள் என்ன?