Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் படுக்கையில் செக்ஸ் கொடுமை: 16 வயது சிறுமியின் கண்ணீர்!

Advertiesment
தினமும் படுக்கையில் செக்ஸ் கொடுமை: 16 வயது சிறுமியின் கண்ணீர்!
, செவ்வாய், 26 ஜூலை 2016 (08:57 IST)
ராஜஸ்தானில் 16 வயது சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அந்த காவல் நிலையமே அதிர்ந்து போனது. என்னை, எங்க அப்பாகிட்டயிருந்து விலைக்கு வாங்கி ஒரு வருடமாக ஒருவர் படுக்கையில் செக்ஸ் கொடுமை செய்கிறார் என்பதே புகார்.


 
 
லட்சா ராம் கிருபா ராம் சௌத்திரி என்ற அந்த நபர், கடந்த ஒரு வருடமாக தன்னை அடித்து துன்புறுத்துகிறார், அடி தாங்க முடியவில்லை. உடலின் அந்தரங்க காயங்களை காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலரிடம் காண்பிக்கிறார் அந்த சிறுமி. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு அந்த சிறுமியை பாலியல் ரீதியாக அந்த கொடூர வக்கிர மனிதன் கொடுமை படுத்தியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
 
உடனடியாக சிறுமியின் புகாரை பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்தது. ஆனால் அந்த நபர் சிறுமியின் புகாரையும், தான் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறோம் என்பதையும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் பதில் கூறியுள்ளார்.
 
அவள் எனக்கு உரிமையானவள், அவளை என்ன வேண்டுமானாலும் செய்வேன், ரூ.6.3 லட்சம் கொடுத்து ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் அவளது பெற்றோரிடம் இருந்து விலைக்கு வாங்கி திருமணம் செய்துள்ளேன்.
 
சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்ததற்கான பத்திரத்தையும் அந்த நபர் காவலர்களிடம் காட்டியுள்ளான். அந்த பத்திரத்தில் சிறுமிக்கு 20 வயது என அவளது பெற்றோரே எழுதி கொடுத்திருப்பது மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமாரிடம் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை