Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமி ஆசிஃபாவின் வக்கீல் வெளியிட்ட பரபரப்பு தகவல்; அதிர்ச்சியில் பொதுமக்கள்

சிறுமி ஆசிஃபாவின் வக்கீல் வெளியிட்ட பரபரப்பு தகவல்; அதிர்ச்சியில் பொதுமக்கள்
, திங்கள், 16 ஏப்ரல் 2018 (07:37 IST)
சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் நான் கொலை அல்லது கற்பழிப்புக்கு ஆளாகலாம் என வழக்கை விசாரிக்கும் வக்கீல் தீபிகா சிங் ராஜவத் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா, கடந்த ஜனவரி மாதம் கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது.
webdunia
இந்நிலையில் சிறுமியின் கொலை வழக்கை விசாரிக்கும் வக்கீல் தீபிகா சிங் ராஜவத், ஒரு பரபரப்பு புகாரை குறியிருக்கிறார், இந்த வழக்கில் இருந்து விலகவேண்டும் என தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவிதார். ஆதலால் தான் எந்நேரமும் கொலை அல்லது கற்பழிப்புக்கு ஆளாகலாம் என தெரிவித்தார். இதற்கெல்லாம் தான் பயப்படப்போவதில்லை எனவும் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்போவதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக மாணவி சன்ஸ்பெண்ட்?