பிரசாந்த் பூஷனுக்காக ஒரு ரூபாய் அபராதத்தை கட்டியவர் இவர்தான்
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் சமீபத்தில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகளை விமர்சனம் செய்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருடைய குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது
இந்த் நிலையில் சற்று முன்னர் அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் என்றும் இந்த அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தில் வாதாட தடை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது
இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் ஒரு ரூபாய் அபராதத்தை காட்டுவாரா? அல்லது 3 மாதம் சிறை செல்வாரா? என்பது குறித்த கேள்வி வழக்கறிஞர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் எனது சீனியர் வழக்கறிஞர் ராஜிவ் தவான் அவர்கள் எனக்காக ஒரு ரூபாயை தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே கொடுத்துள்ளார். அவருடைய இந்த ஒரு ரூபாயை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டு உள்ளார்
எனவே பிரசாந்த் பூஷனுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அவருடைய சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான் அவர்கள் முயற்சியால் கட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது